நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இன்று இந்தியா வருகை! முர்மு, மோடியுடன் சந்திப்பு!

Wait 5 sec.

நேபாள நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷா அரசு முறைப் பயணமாக இன்று (நவ. 22) இந்தியாவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் நடைபெற்ற ஜென் - ஸி போராட்டங்களைத் தொடர்ந்து, இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற பாடகர் பாலேந்திர ஷா, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மார்ச் மாதம் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.இந்த நிலையில், பிரதமராகப் பதவியேற்ற பின்பு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பாலேந்திர ஷா ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) இந்தியாவுக்கு வருகை தருகிறார்.நேபாள பிரதமரின் 2 நாள் இந்தப் பயணத்தில், அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னி வாக்லே, வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் ஆகியோர் உள்பட சுமார் 34 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வருகின்றனர்.இந்தப் பயணத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்திக்கும் நேபாள பிரதமர் ஷா, இருநாடுகள் இடையேயான முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.இந்தச் சந்திப்புகளில், கல்வி, சுகாதாரம், விவசாயம், விண்வெளி, பேரிடர் மேலாண்மை மற்றும் மனித வளம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, நேபாளத்தில் புதியதாகப் பதவியேற்கும் பிரதமர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருவதையே பாரம்பரியமாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால், முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கடந்த 2024 ஆம் ஆண்டு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீனாவுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்க எம்.பி.க்களுக்கு தலா ரூ. 150 கோடி பேரம் பேசும் பாஜக?Nepal PM Balendra Shah To Arrive In New Delhi Today On A Two-Day Visit To India