வெலிங்டனில் நடைபெற்றுவரும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.டாஸ் வென்ற இந்தியா பந்துவீச, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 720 ரன்கள் எடுத்திருந்த வேளையில் டிக்ளேர் செய்தது.தற்போது, நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. நியூசிலாந்து 45 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவைவிட நியூசிலாந்து 233 ரன்கள் பின் தங்கியுள்ளது.டாம் லாதம் பும்ரா பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். ஹென்றி நிகோலஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை துருவ் ஜுரெல் அட்டகாசமான ஃபீல்டிங் மூலம் கேட்ச் எடுத்தார்.பொறுமையாக விளையாடிய டெவான் கான்வே அரைசதம் (59*) அடித்துள்ளார். இவருடன் இணைந்த ரச்சின் ரவீந்திரா ஆட்ட நேர முடிவில் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். இருவருமாக இணைந்து 137 பந்துகள் விளையாடி விக்கெட் கொடுக்காமல் 59 ரன்கள் சேர்த்தார்கள். ஐந்தாம் நாளில் இந்தியா வெல்ல 8 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.That will be Stumps on Day 4!#TeamIndia with the important wicket of Henry Nicholls in the final session New Zealand trail by 233 runs as a crucial Day 5 beckons ⏳Scorecard ▶️ https://t.co/SaMcNXtAVG#NZvIND pic.twitter.com/4Re39tYM9r— BCCI (@BCCI) November 22, 20262018 சர்ச்சை: வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து வார்னர், கவாஜா தற்காலிக நீக்கம்!Devon Conway hits a half-century; New Zealand trail by 233 runs!