இஸ்ரேலில் புதிய அரசு அமைக்கும் பொறுப்பில் உள்ள காடி ஐசென்கோட், கூட்டணி அரசு அமைப்பது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வென்றன.அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை எந்தவொரு கட்சியும் கைப்பற்றவில்லை. பின்னர், அரபு கட்சிகளின் கூட்டணி ஐசென்கோட்டுக்கு ஆதரவளித்துன. இதனால், 6 வாரங்களுக்குள் கூட்டணி அரசை அமைக்கும் பொறுப்பு ஐசென்கோட்டிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐசென்கோட்டின் யஷார் கட்சித் தலைமையிலான கூட்டணியில் இணைந்து புதிய அரசை அமைப்பதற்கு நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்று (நவ. 22) தொடங்கவுள்ளன. ஐசென்கோட் தலைமையிலான கூட்டணி அரசு அரபு கட்சிகளுடன் இணைந்து அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த முடிவுக்குக் கூட்டணியில் இடம்பெற்ற பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபற்றி, ஐசென்கோட் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், ஐசென்கோட் தலைமையின் கீழ் சியோனிஸ்ட்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், அவரது கட்சி நெதன்யாகுவுடன் கூட்டணி சேர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே, நெதன்யாகுவின் அரசு குறித்து இஸ்ரேலியர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால், ஐசென்கோட் அரபு கட்சிகளின் ஆதரவை ஏற்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மெக்ஸிகோ: எஃப்பிஐ தேடி வந்த முக்கிய போதைப்பொருள் கும்பல் தலைவா் கைதுGadi Eisenkot, who is tasked with forming a new government in Israel, is holding discussions with PM Netanyahu’s Likud party regarding the formation of a coalition government.