பிக் பாஸ் 10: இந்த வாரம்நண்பர்களென்று விமர்சிக்கப்பட்ட இருவர் வெளியேற்றம்!

Wait 5 sec.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 11 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 77-வது நாளை எட்டியுள்ளது. நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் 4 வாரங்களே உள்ளன.இதற்குள் போட்டியாளர்கள் தங்களை நிரூபித்து, இறுதி வாரத்துக்குள் செல்ல வேண்டும். இந்தச் சூழலில் போட்டியாளர்கள் முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே பில்டப் சுற்று நடத்தப்பட்டது. இதில் அதிக மதிப்பெண் பெற்று, தன்யா தேர்வானார். இவருக்கான சலுகை டிக்கெட் டூ ஃபினாலே சுற்றில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, 11வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு ஜேசன், முகேஷ், லட்சுமி பிரியா, டிடிவி வாசன், முனியம்மாள், ஷாதிகா, பிருத்வி ஆகிய 7 பேர் தேர்வாகி இருந்தனர்.இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற முகேஷ், ஷாதிகா ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.முகேஷ், ஷாதிகா ஆகிய இருவரும் நண்பர்களாக இணைந்து விளையாடுகிறார்கள் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வாரம் இருவரும் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.Reports indicate that two contestants have been eliminated from Bigg Boss Season 10 this week as well.பிக் பாஸ் 10: இந்த வாரம் எதிர்பாராத இருவர் வெளியேற்றம்!