தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க எம்.பி.க்களுக்கு ரூ. 150 கோடி வரையில் பேரம் பேசப்படுவதாக பாஜக மீது சிவசேனை (உத்தவ்) குற்றம் சாட்டியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய நிலையில், பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.இதனைத் தொடர்ந்து, இவ்விரு மசோதாக்களையும் நிறைவேற்ற பாஜக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு திரட்ட எம்.பி.க்களிடம் பேரம் பேசப்படுவதாக சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க எம்.பி.க்களிடம் பேரம் பேசி வருகின்றனர். இரு நாள்களுக்கு முன்னர் ரூ. 100 கோடியாக இருந்த பேரம், இப்போது ரூ. 150 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் முக்கிய தலைவர்களுக்கு இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் அமித் ஷா ஏன் அடிக்கடி மும்பை வருகிறார்? இங்கு அப்படி என்ன பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன?5 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு எம்எல்ஏ ரூ. 50 கோடிக்கும், ஒரு எம்.பி. ரூ. 75 கோடிக்கும் விலைக்கு வாங்கப்பட்டனர். இப்போது ரூ. 150 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு நல்ல விலைதான்.துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடனான ஒப்பந்தத்தின்கீழ், சிவசேனை (உத்தவ்) கட்சியில் இருந்து விலகிய 6 எம்.பி.க்களுக்கு தலா ரூ. 80 கோடி வழங்கப்பட்டது. இங்கு அரசியல் தேசிய பங்குச் சந்தைபோல் நடக்கிறது" என்று தெரிவித்தார்.4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!Shiv Sena (UBT) MP Sanjay Raut alleges attempt to 'buy' MPs for passage of delimitation bill