நல்ல வரவேற்பு... சத்தியவான் சாவித்திரி படத்துக்கான திரைகள் அதிகரிப்பு!

Wait 5 sec.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சத்தியவான் சாவித்திரி திரைப்படத்திற்கான திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கோர்ட் ரூம் டிராமாவாக உருவான இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் முன்னணி கதாபாத்திரத்தில் வழக்குரைஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.ஜி ஸ்டூடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஹார்ட்பீட் சாருகேஷ், பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், திரைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ரசிகர்களிடம் இந்தப் படத்தை பார்த்து ஆதரவு தருமாறும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது. Our @KeerthyOfficial has a request for you as #SathyavanSavithiri is in theatres now!No Spoilers Please Book your tickets now for the courtroom drama! @DirectorMysskin @PraveenSVijaay @SamCSmusic @ZeeStudios_ @zeestudiossouth @tseriessouth #Charukesh @Bala_actor @ertviji pic.twitter.com/LdWvpfh7je— Drumsticks Productions (@DrumsticksProd) November 21, 2026முதல் நாள் வசூல்: இட்லி கடை, கர திரைப்படங்களின் வசூலை முந்திய ஓ.ம்! Keerthy suresh Sathyavan Savithir Extra Shows & screens has been added This film Deserves