ரியல் மாட்ரிட் அபார வெற்றி: புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற்றம்!

Wait 5 sec.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் அதிகமுறை கோப்பை வென்ற ரியல் மாட்ரிட் அணி மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளது. இன்று அதிகாலையில் தொடங்கிய இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி தனது சொந்த மண்ணில் பிஎஸ்வி உடன் மோதியது. இந்தப் போட்டியில் பிஎஸ்வி அணியின் இவான் பெரிசிக் 32ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து 1-0 என முதல் பாதியில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ரியல் மாட்ரிட் அணி ருத்ரதாண்டவம் ஆடியது. முதல்பாதியில் இல்லாத ஜூட் பெல்லிங்கம் 46ஆவது நிமிஷத்தில் களமிறக்கப்பட்டார். அவர் சிறப்பான ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்தினார். வல்வெர்டே 50, ஜூட் பெல்லிங்கம் 60, எம்பாபே 64, 84, வினிசியஸ் ஜூனியர் 87ஆவது நிமிஷங்களிலும் கோல் அடித்து மிரட்டினார்கள். இறுதியில் 5-1 என அபார வெற்றியைப் பதிவு செய்தார்கள். இந்தப் போட்டியில் 59 சதவிகித நேரம் பந்தை ரியல் மாட்ரிட் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். 624 பாஸ்களை 92 சதவிகித துல்லியத்துடன் அசத்தினார்கள். 20 ஷாட்டுகள் 9 முறை இலக்கை நோக்கி அடித்தார்கள். இந்த வெற்றியின் மூலமாக பிஎஸ்ஜியை பின்னுக்குத் தள்ளி ரியல் மாட்ரிட் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. பார்சிலோனா எட்டாவது இடத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கது. Hoy tenemos dos MVPs... pic.twitter.com/ue1dijij96— Real Madrid C.F. (@realmadrid) November 24, 2026 ¡Goleada y partidazo! pic.twitter.com/J2cKmUv1ro— Real Madrid C.F. (@realmadrid) November 24, 2026டெஸ்ட் தரவரிசை: டாப் 10ல் இடம்பிடித்த மூன்று இந்திய வீரர்கள்! Champions League Stunning victory for Real Madrid: They move to the top of the standings!