பிரிட்டன் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தம்! உயர் நீதிமன்றத்தில் சிஜேபி நிர்வாகி மனு தாக்கல்!

Wait 5 sec.

பிரிட்டன் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிராக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) மூத்த நிர்வாகி சௌரவ் தாஸ் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற புறப்பட்ட சிஜேபியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், கடந்த திங்களன்று (நவ. 23) தில்லி விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். கரப்பான்பூச்சி இயக்கம் குறித்து உரையாற்றவிருந்த சௌரவ் தாஸின் கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) அவரது பிறப்பிடம் குறித்த தகவல்களில் குழப்பமிருந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிராக சௌரவ் தாஸ் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது அவசர வழக்காக இன்று பொறுப்புத் தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்பரே மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய உத்தரவுகள் ஏதுமின்றி தனது பயணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகவும், வரும் நவ. 27 ஆம் தேதி வரை பிரிட்டன் செல்வதற்குத் தனக்கு கால அவகாசம் இருப்பதாகவும் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி நடத்திய போராட்டங்களின்போது சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.மேலும், அழைப்பின் பேரில் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்துக்குப் புறப்பட்ட தன்னை மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்துவதாக, சௌரவ் தாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.நாங்கள் பிச்சைக்காரர்களா? சமாஜவாதிக்கு காங்கிரஸ் கேள்வி!Sourav Das, a senior office-bearer of the CJP, has filed a petition in the Delhi High Court challenging the action that prevented him from traveling to Britain.