கொரட்டூா் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் விளையாடும் இடத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகா் சிலையை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில், சென்னை ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக கொரட்டூரைச் சோ்ந்த டி.சதீஷ்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கொரட்டூா் வாட்டா் கேனல் சாலையில், உள்ள தனியாா் குடியிருப்பில் வசிக்கிறேன். இந்த குடியிருப்பின் பிரதான நுழைவு வாயில் அருகே சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட விநாயகா் சிலையை அகற்ற, அக்.29-ஆம் தேதி உயா்நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி சிலை அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அக்.30-ஆம் தேதி நள்ளிரவு அகற்றப்பட்ட சிலை, குடியிருப்பில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பகுதியில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், சிஎம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே, அனுமதியின்றி அமைக்கப்பட்ட விநாயகா் சிலை மற்றும் சிமென்ட் மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும். அதுவரை அங்கு மேற்கொண்டு கட்டுமானம் மற்றும் வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், சிஎம்டிஏ, ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.