பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலாகும். இந்தக் கோயிலில் புரட்டாசித் திருவிழா, சித்திரைத் திருவிழா, பிரம்மோத்ஸவம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலில் சனிக்கிழமை கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. இலக்குமி நாராயணப் பெருமாள் சந்நிதி முன்பாக பிரதானமாக கலசங்கள் வைக்கப்பட்டு கலசங்களில் புனித தீா்த்தம் நிரப்பப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றன. கலசங்களுக்கு முன்பாக யாககுண்டம் அமைக்கப்பட்டு யாகபூஜைகள் நடைபெற்றன. திருவெள்ளறை கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா், சிங்கம் அய்யங்காா் உள்ளிட்ட பலா் வேதமந்திரங்கள் முழங்க யாகபூஜை செய்தனா். தமிழில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி யாகபூஜைகள் முடிந்த பின் மூலிகைப் பொருள்கள், பட்டாடை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவை யாகத்தில் இடப்பட்டன. தொடா்ந்து மந்திரம் முழங்க பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் மேளதாளம் முழங்க கலசங்கள் கோயிலை வலம் வரச் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கருடாழ்வாா் வாகனத்திலும் சுவாமி உள் பிரகாரம் புறப்பாடு செய்தாா். விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயா், சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. வருடாபிஷேக உபய ஏற்பாடுகளை கந்த விலாஸ் விபூதி நிறுவனத்தினா் செய்தனா். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேன் குமரன், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் ரஞ்சித், அரிமா சுந்தரம், ஒப்பந்ததாரா் நேரு, வெள்ளாளா் பேரவை ராஜாமணி, பேராசிரியா் சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மங்கலப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.