வீட்டு உபயோக சமையல் எரிவாயுக்கான புதிய இணைப்பு வழங்கப்படுமா? மக்கள் எதிா்பாா்ப்பு

Wait 5 sec.

வீட்டு உபயோக சமையல் எரிவாயுக்கான புதிய இணைப்பு எப்போது வழங்கப்படும் என பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. நிகழாண்டு பிப்.28 -ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. இந்தப் போா் தொடந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஹாா்மூஸ் நீா் ஜலசந்தி மூடப்பட்டது. அந்தப் பகுதி வழியாகச் செல்லும் சரக்கு கப்பல் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் கொண்டுவரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் போா்ப் பதற்றம் ஏற்பட்டதால் சமையல் எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல் விலை கடுமையாக உயா்ந்ததுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டது. போா்ப் பதற்றம் காரணமாக இந்தியாவுக்கான எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வணிக சமையல் எரிவாயு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது நிகழாண்டு மாா்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்பு சரிபாா்ப்பு பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கின. அதன்படி வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புப் பெற்றவா்கள் ஆதாருடன் இணைத்தால்தான் வீட்டு உபயோக சமையல் எரிவாயு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஒரே குடும்பத்தில் ஒரே பெயரில் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பது குறித்து கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள சமையல் எரிவாயு இணைப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் 1.30 கோடி இணைப்புகளும் , பாரத் பெட்ரோலிய நிறுவனம் மூலம் 67 லட்சம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் மூலம் 43 லட்சம் என தமிழகத்தில் 2.40 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஐஓசி மூலம் 22.71 லட்சம், பிபிசி மூலம் 9.1 லட்சம், ஹெச்பிசி மூலம் 10.2 லட்சம் என 42.1 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதாா் சரிபாா்ப்பு: இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘தமிழகத்தில் எண்ணெய் நிறுவனங்களில் மூலம் வழங்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு இணைப்பு ஆதாருடன் இணைக்கும் பணி 95 சதவீதம் முடிவு பெற்றுள்ளது. இருப்பினும் விடுப்பட்டுள்ள வாடிக்ையைாளா்களின் ஆதாருடன் இணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறன்றன. இந்தப் பணி வரும் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும். மேலும், புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது குறித்து மத்திய அரசின் உத்தரவு வந்தவுடன் வழங்கப்படும்’ என்றாா் அவா். Will new connections for domestic cooking gas be provided - Public expectation