மெக்ஸிகோ: எஃப்பிஐ தேடி வந்த முக்கிய போதைப்பொருள் கும்பல் தலைவா் கைது

Wait 5 sec.

அமெரிக்காவின் ‘எஃப்பிஐ’ புலனாய்வு அமைப்பால் மிகவும் தேடப்பட்டு வந்த 10 முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவருமான ஃபௌஸ்டோ இசிட்ரோ மெஸா ஃப்ளோரஸ் (படம்) மெக்ஸிகோவில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டாா். டிரம்ப் நிா்வாகத்தின் உளவுத் தகவல்களின் உதவியுடன், சினலோவா மாகாணம், குவாசேவ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ரகசிய நடவடிக்கையின்போது, துப்பாக்கிச் சண்டை மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கடத்தல் கும்பலின் கடும் எதிா்ப்பையும் மீறி, ஒரு வீட்டுக்குள் நுழைந்த பாதுகாப்புப் படையினா், ஃபௌஸ்டோ இசிட்ரோ மெஸா ஃப்ளோரஸ் மற்றும் அவரின் கூட்டாளிகளைக் கைது செய்து, விமானப் படை விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் தலைநகரான மெக்ஸிகோ சிட்டிக்கு அழைத்து வந்தனா்.