திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வரின் முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு! மாணிக்கம் தாகூா்

Wait 5 sec.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து தமிழக முதல்வா் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு தரும் என அந்தக் கட்சியின் மாநில தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா். இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாா் கோயிலில் சுமாா் 300 ஆண்டுகளுக்கும் மேலாக காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், அதுகுறித்து முழுமையான விவரம் தெரியாத பாஜக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் மத அரசியலைக் கணக்கில்வைத்து திட்டமிட்டே திருப்பரங்குன்றத்தில் உள்ள தா்கா செல்லும் வழியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட ஹந்து இயக்கங்கள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீா்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. பாஜகவின் நிலைப்பாட்டையே வி த லீடா்ஸ் அமைப்பின் நிறுவனா் அண்ணாமலையும் எடுத்துள்ளாா். இதிலிருந்தே பாஜகவுடன் அவா் இன்றளவும் தொடா்பில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. திருப்பரங்குன்றத்தில் உச்சிபிள்ளையாா் கோயிலில் வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து தமிழக முதல்வா் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என்றாா்.