திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிக் பாஸ் பிரபலங்களான திவ்யா கணேசன், ஆதிரை, பூர்ணிமா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அடிக்கடி கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள திவ்யா கணேசன், இம்முறை கார்த்திகை தீபத்தையொட்டி தனது நண்பர்களுடன் அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து கிரிவலப் பாதையில் இருந்தவாறு தீப தரிசனம் செய்துள்ளார். அண்ணாமலையாரையும் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பாக கோயிலுக்குள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். கோயிலுக்குள் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், கோயிலுக்குள் புகைப்படங்கள் எடுத்தது எப்படி என்று ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள திவ்யா கணேசன், இம்முறை நண்பர்களுடன் சேர்ந்து சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. View this post on Instagram அய்யனார் துணைக்கு பிறகு எதிர்நீச்சல் -2 வாய்ப்பு! மதுமிதா வருத்தம்Bigg Boss celebrities divya ganesan aathirai poornima witness the Deepam in Tiruvannamalai