என் தந்தை கொல்லப்பட வேண்டுமென்றே அவரது பாதுகாப்பு விலக்கப்பட்டது: ராகுல் காந்தி

Wait 5 sec.

முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தற்செயலாக நடக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.சோனியா காந்தியின் நினைவுக் குறிப்பு நூலான "பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்" (Belonging: A Journey of Love) சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இணைந்து உரையாடல் நிகழ்வு ஒன்றை மேற்கொண்டனர்.உரையாடல் நிகழ்வு காணொளி இன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.ராஜிவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எதிர்கொண்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து சோனியா காந்தி விவரிக்கையில், “ராகுல் வீட்டிற்குத் திரும்பிய அதேநேரத்தில் என் கணவர் சுற்றுப்பயணத்திற்குக் கிளம்பினார். பிகாருக்குச் சென்ற அந்தப் பயணத்தின்போது, ராஜீவ் திர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர் திறந்த ஜீப்பில் சென்றுகொண்டிருந்த போது, அவர் மீது கற்கள் வீசப்பட்டன.முறையான பாதுகாப்பு இல்லாத சூழலில், பாஜக அல்லது எதிர்க்கட்சியினர் ஆட்சியில் உள்ள மாநிலத்திற்குச் செல்கையில் அங்குள்ள பொறுப்பாளர்கள் முறையான பாதுகாப்பு வழங்குவதில் அக்கறை காட்டுவதில்லை. அவர் தானே வருகிறார் என்று அலட்சியமாக இருந்துவிடுவார்கள்” என்று கூறினார்.மேலும், ”அது மிக மோசமான சுற்றுப்பயணமாக இருந்தது. அந்தப் பயணம் முழுக்க ராகுல் தந்தையுடனே இருந்தார். அவரது தந்தைக்கு எதிராக மக்கள் கூச்சலிடுவதையும் அவர் நேரில் கண்டார். வீட்டிற்குத் திரும்பியதும் ராகுல் என்னிடம், ‘அப்பாவின் பாதுகாப்பு விஷயத்தில் நாம் ஏதும் செய்யாவிட்டால், அவரது இறுதிச் சடங்கிற்காகத்தான் நான் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டியிருக்கும்’ என்று சொன்னார்” என சோனியா காந்தி தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “அந்த பிகார் பயணமே ஒரு இறுதிக்கட்ட நிகழ்வாக அமைந்தது. அதைப்பற்றி நான் முன்பிருந்தே சொல்லிக் கொண்டிருந்தேன். அதுபற்றி எனது நிலைப்பாடு தெளிவாக இருந்தது. என் தந்தையின் பாதுகாப்பு நீக்கப்பட்டது, அவரைக் கொல்வதற்காகவே செய்யப்பட்டது. அவர் கொல்லப்படுவதற்கான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அது தெளிவாகத் தெரிந்தது. அதுபற்றி என் தந்தை மற்றும் தாயிடம் சொன்னேன். அவருடன் இதுபற்றி விவாதம் கூட செய்திருக்கிறேன்” என்று ராகுல் காந்தி உணர்ச்சிகரமாகப் பேசினார்.இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, சோனியா காந்தி ராஜீவின் விஷயத்தில் மிகுந்த அச்சமும் கவலையும் கொண்டிருந்தாக பிரியங்கா காந்தி தெரிவித்தார். தங்களின் வீட்டைச் சுற்றியுள்ள முள்வேலிகளைச் சரிபார்ப்பதும், காவலர்கள் தூங்குகிறார்களா என்று கவனிப்பதுமாகவே அவர் இருந்ததாக பிரியங்கா குறிப்பிட்டார்.“என் அறை வீட்டின் முற்பகுதியில் இருந்தால் இவை அனைத்தும் எனக்குத் தெரியும், என் தந்தையின் காலடிச் சத்தம் கேட்கும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியாது” என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு மே 21 அன்று, சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படை நடத்திய குண்டுவெடிப்பில் பலியானார்.1989 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு, பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.காசியில் 11 லட்சம் தீபங்கள், 2100 டிரோன்கள் மூலம் ஒளிர்ந்த கங்கைக்கரை!Congress leader Rahul Gandhi has stated that the killing of his father, former Prime Minister Rajiv Gandhi, did not happen by accident.