சௌதி தலைநகரில் ஹௌதிகள் மீண்டும் தாக்குதல்! 2 இந்தியர்கள் உள்பட 11 பேர் படுகாயம்!

Wait 5 sec.

சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தின் மீதான ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனில் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்கள் வெடித்துள்ளன.இந்த மோதல்களில் யேமனில் ஹௌதி தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், சௌதியின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஹௌதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ரியாத் நகரத்தின் ஃபினான்ஷியல் மாவட்டப் பகுதியிலுள்ள ஒரு உயர் கோபுரக் கட்டடத்தின் மீது ஹௌதிகள் ட்ரோன்கள் மூலம் இன்று (நவ. 25) தாக்குதல் நடத்தியுள்ளனர். சௌதியின் எண்ணெய்க் கட்டமைப்புகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக, ஹௌதிகள் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலில், 2 இந்தியர்கள், 2 சௌதி அரேபிய நாட்டினர், நேபாளத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, சௌதி மற்றும் ஹௌதிகள் இடையேயான மோதல்களால் சௌதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் உடனான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனங்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.வங்கதேசம்: ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை! நிர்வாகி சுட்டுக்கொலை!11 people, including 2 Indians, sustained serious injuries in an attack by Houthi rebels on Riyadh, the capital of Saudi Arabia.