8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!

Wait 5 sec.

மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வலுவான கொள்முதல் மற்றும் தொடர் வெளிநாட்டு நிதி வரவால், இந்திய ரூபாய் மதிப்பு 69 காசுகள் உயர்ந்து, இந்த ஆண்டின் இதுவரை இல்லாத உச்சபட்ச அளவான ரூ. 92.16 ஆக நிலைபெற்றது.குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக அமைந்தது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இதுவரை ஏற்பட்டிருந்த ரூபாயின் இழப்பு முழுவதையும் ஈடுகட்டி, ரூபாய் மதிப்பு வெகுவாக மீண்டது. அதே வேளையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் பிற நாடுகளில் முதலீடு செய்வதை விட இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு அதிக முன்னுரிமை அளித்து வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 92.65 ஆக வர்த்தகத்தை தொடங்கி, வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 69 காசுகள் உயர்ந்து ரூ. 92.16 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.நேறைய முன்தினம் (திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பு அதன் ஏழு மாத கால உச்ச நிலையிலிருந்து சரிந்து, டாலருக்கு நிகராக 23 காசுகள் இழப்புடன் ரூ. 92.85 ஆக இருந்தது.The rupee on Wednesday jumped 69 paise to settle at 92.16 the highest level in this year so far.காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!