நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் மீண்டும் கூடுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தொடா்ந்து கடந்த ஆக.13-ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 103 நாள்கள் கடந்துவிட்டன.நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதில் ஏற்படும் தாமதம் குறித்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.நவம்பர் 30 ஆம் தேதியில் மக்களவை அமர்வும், டிசம்பர் 2 ஆம் தேதியில் மாநிலங்களவை அமர்வும் நடத்த அரசு பரிந்துரைத்துள்ளது. அத்தியாவசியமான அரசு அலுவல்களை விவாதிக்குமாறு மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.மக்களவைத் தொகுதிகள் மறுசீராய்வு மசோதா குறித்து மீண்டும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.அவசியத்தை பொறுத்து. இரு அவைகளின் கூட்டத்தொடரும் டிசம்பர் 3 ஆம் தேதியில் நிறைவடையக் கூடும்.கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: சாட்சியாக மாறும் நீதிபதி!Special session of Parliament from November 30 to December 3