பெண் அதிகாரி புகார்: திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு!

Wait 5 sec.

கள்ளக்குறிச்சியில் பெண் அரசு அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது காவல் துறையினர் இன்று (நவ. 26) வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் குறித்து புகார் அளித்துள்ளார். அப்புகாரில் தன்னை சாதி பார்த்து பணிபுரிவதாக இழிவான முறையில் வசந்தம் கார்த்திகேயன் தொலைபேசியில் பேசியதாகவும், பணியில் நீடிப்பது குறித்து மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அநாகரிகமாக மெசேஜ் செய்தது மட்டுமின்றி அவதூறு பரப்பியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் தியாகதுருகம் காவல் துறையினர் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது திமுக எம்.எல்.ஏ. மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: சாட்சியாக மாறும் நீதிபதி!Complaint by female official: Case filed against DMK MLA Vasantham Karthikeyan