23.11.1976: முன்னாள் தி.மு.க. மந்திரி கார்கள் பறிமுதல்

Wait 5 sec.

சென்னை, நவ. 22 - முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் கண்ணப்பனுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் அம்பாசிடர் கார்களை தமிழக விசேஷ போலீஸ் புலனாய்வுத் துறையினர் பறி முதல் செய்துள்ளனர். டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார்கள் கண்ணப்பனின் சொந்த மாவட்டமான கோவை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டன.பின்னர் இந்த இரு கார்களையும் விசேஷ புலனாய்வுப் பிரிவினர் சென்னைக்குக் கொண்டு வந்து, பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேஷ நீதிபதி சாமிக்கண்ணு முன்னிலையில் ஆஜர் செய்தனர். அந்த இரு கார்களையும் நீதிமன்றப் பொறுப்பில் வைத்திருக்க நீதிபதி உத்திரவிட்டார். "சாதனை மலர்" வெளியீடு என்கிற பெயரில் முறைகேடாகப் பெறப்பட்ட ஆலய நிதியிலிருந்து இந்த இரு கார்களும் வாங்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. "சாதனை மலர்" வெளியீடு, முறைகேடாக ஆலய நிதி பெறப்பட்டது ஆகியவை தொடர்பாக ஏற்கெனவே கண்ணப்பனிடம் உதவியாளராக இருந்த ரெங்கனாதன், அறநிலையத் துறையின் வெளியீடான திருக்கோவில் இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய ஐகன்னாதன் ஆகிய இருவரையும் விசேஷ புலனாய்வு துறை போலீசார் கைது செய்துள்ளதும். கண்ணப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் நினைவிருக்கலாம்.இதன் தொடர்பாக, இந்த சாதனை மலருக்கு விளம்பரம் மூலம் நிதி கொடுத்த சில ஆலயங்களின் நிதி விவகாரகளையும் விசேஷ போலீஸ் புலனாய்வுத் துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.பாக். வசமுள்ள காஷ்மீர் விடுவிக்கப்படவேண்டும் என்கிறார் அப்துல்லாஜம்மு, நவ. 22 - பாகிஸ்தானின் வசமுள்ள காஷ்மீர் மாநிலத்தின் பகுதி விடுவிக்கப்பட வேண்டும் என்று காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லா கோரினார். இப்பகுதி மீது பாகிஸ்தானுக்குத் தார்மீக உரிமையோ, சட்டபூர்வமான உரிமையோ கிடையாது என்று கூறினார்.காஷ்மீர் எல்லை நகரமான பிஷ்நாவில் நேற்று முன்தினம் தேசிய மகாநாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார். இயற்கைக்கு முரணாக மாநிலத்தின் பிரிவினையானது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவற்றில் சில சிக்கலானவை என்றும் கூறினார். போர் நிறுத்தக் கோட்டுக்கு அப்பால் உள்ள பகுதி பற்றி மக்கள் இறுதியான முடிவை விரும்புவதாக அப்துல்லா கூறினார்.இந்நாட்டுடன் பாகிஸ்தான் இரண்டு தடவை போர் புரிந்துள்ளது. இதனால் எல்லைக் கோட்டிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். அவர்களில் பலர் இன்னமும் தீர்க்க முடியாத சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.23.11.1976: Cars belonging to former DMK minister seized22.11.1976: வருமானம், விலை கட்டுப்பாட்டுக்கு முதலில் கொள்கை வகுக்கவேண்டும் - பிரதமர் இந்திரா காந்தி