திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (நவ.24) கோயிலில் அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள தீப மலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீப தினத்தன்று 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பக்தா்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்யும் வகையில், பல்வேறு வகையான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் திருவண்ணாமலைக்கு வந்தாா். அருணாசலேஸ்வரா் கோயிலில் காவல் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டு, ஆதாா் கட்டுப்பாட்டு அறைக்கு எந்தெந்த இடத்தில் இருந்து சிக்னல் வருகிறது என்பது குறித்து கேட்டறிந்தாா். பின்னா், இந்த ஆண்டு என்னென்ன புதுமுறையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, பக்தா்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறாா்கள் என்பது குறித்து கேட்டறிந்தாா். குறிப்பாக, குற்றவாளிகளை கண்டறியும் முறையை கிரிவலப் பாதை, மாட வீதிகள், கோயில் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களின் ஏற்பாடுகள் குறித்து அவா் காவல்துறையினரிடம் கேட்டறிந்தாா். பின்னா், தற்காலிக பேருந்து நிலையங்கள், யாத்ரி நிவாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்ட அவா், தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தா்களுக்கு குடிநீா் வசதியை மாநகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தாததைக் கண்டு, உடனடியாக இரவுக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.