பாதுகாப்பற்றதா பிஸ்லெரி குடிநீர்..?

Wait 5 sec.

புது தில்லி: பாட்டிலில் அடைக்கப்பட்ட பிஸ்லெரி குடிநீர் அருந்துவதற்கு "பாதுகாப்பற்றது" எனக் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் சுகாதாரமற்ற, காலாவதியான அல்லது பாதுகாப்பற்ற உணவை விற்பனை செய்யும் உணவு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய குடிநீர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லெரி ஆகும்.இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்திலிருந்து மினரல் வாட்டர் அல்லாத பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. ஆய்வக சோதனையில் அந்த மாதிரி, பரிந்துரைக்கப்பட்ட புரோமேட் எனப்படும் வேதிப்பொருள் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பிஸ்லெரி நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, அந்த மாதிரி மீண்டும் உயர் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அந்த நீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (பிஎஎச்எஸ்) இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்த ஆய்வகமும் அந்த குடிநீரை 'பாதுகாப்பற்றது' என அறிவித்ததுஆய்வக பரிசோதனை முடிவுகளின்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் கீழ் பாதுகாப்பற்ற உணவை விற்பனை செய்தல் தொடர்பான விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் என தெரிவித்துள்ளது.புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் ஆகிய இரண்டு வேதிப்பொருள்களும் அதிகயளவில் உடலுக்குள் சென்றால் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் கீழ் பிஸ்லெரி நிறுவனம் மீது வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.சுகாதாரமற்ற, காலாவதியான அல்லது பாதுகாப்பற்ற உணவை விற்கும் உணவு நிறுவனங்கள் மீது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பிஸ்லெரி நிறுவனம் சமீபத்தில் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளது.வசந்த் மசாலா பிரைவேட் லிமிடெட், டிட்-பிட் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிமான்சா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆஷா கன்ஃபெக்ஷனரி உள்ளிட்ட வேறு சில நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளதாகவும் உணவு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. இந்த சோதனை முடிவு ஒரு குறிப்பிட்ட மாதிரியை மட்டுமே சார்ந்தது. எந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட சோதனை மாதிரி, எந்த தொகுதி போன்ற விவரங்களை ஆணையம் வெளியிடப்படவில்லை. மேலும், வழக்குத் தொடருவதற்கு அனுமதி அளித்திருந்தாலும், பிஸ்லெரி நிறுவன தயாரிப்புகளுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Bisleri is the latest to face action from the FSSAI, which has been cracking down on food companies selling unhygienic, expired or unsafe food.வணிக இதழியலில் ஒரு புதிய அத்தியாயம்!