குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

Wait 5 sec.

குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேரருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த தொடா் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகம் இருந்தது. பேரருவியில் நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பேரருவியைத் தவிா்த்த ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டிய நீா்.