திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.ரயில் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசல் அதிகரித்தது. அவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர். இன்று மாலை மலை மீது தீபம் ஏற்றப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் ஜோதி வடிவத்தை தரிசனம் செய்தனர். பிறகு பக்தர்கள் பலரும் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி 45 நிமிடங்களுக்கு ரயில் தாமதமாக வந்ததாலும் கூட்டம் அதிகரித்தது. விழுப்புரம் - திருவண்ணாமலை, திருப்பதி - திருவண்ணாமலை என திருவண்ணாமலை மார்க்கமாக இன்று 35 ரயில்கள் இயக்கப்பட்டன.முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கத்திலும் ரயில் நிலையத்திற்குள் பக்தர்கள் செல்ல இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.ரயில் நிலையத்திற்கு வெளியேயும் பயணிகள் ரயில் டிக்கெட் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்ட தீபம்!Train delay Crowding at Tiruvannamalai railway station