புதுதில்லி: தென்கொரியாவின் முன்னணி நுகர்வோர் மின்னணு சாதன நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்க், தனது துணை நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் உள்ள 2 சதவீத பங்குகளை விற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.தென்கொரிய தாய் நிறுவனம், தற்போது இந்திய நிறுவனத்தில் 85 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த பங்கு விற்பனையைத் தொடர்ந்து, அதன் பங்குடைமை 83 சதவீதமாகக் குறையும்.எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்க் தனது துணை நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா-வின் ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 2% வரையிலான, அதாவது 1,35,75,447 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.மும்பை பங்குச் சந்தையில், எல்ஜ் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பங்குகள் இன்று 2.34% உயரந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 1,819.70 ஆக நிலைபெற்றது.LG Electronics Inc will divest 2 per cent stake in its subsidiary LG Electronics India.வெள்ளி விலை ரூ. 7,000 சரிவு! தங்கம் விலையும் வீழ்ச்சி!!