நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ராமாயணா படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றுள்ளது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் 20 ஹாலிவுட் படங்களுடன் ராமாயணா படமும் தேர்வாகியுள்ளது. திரை உலகில் ஆஸ்கர் விருதுக்கென்று தனியான வணிக மதிப்பு இருக்கிறது. சிறந்த சர்வதேச படங்களுக்கான பிரிவில் கோந்தல், ஆங்க் ஆகிய இந்திய படங்கள் போட்டியிடுகின்றன.நிதீஷ் திவாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராமாயணா முதல் பாகம் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1,600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. ஒரு சில நிமிஷ காட்சிகளுக்காக பல மாதங்கள் வேலைப் பார்த்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. குறிப்பாக ஜடாயு பறவையின் காட்சிகளுக்கு அதிகமாக மெனக்கெட்டதாக படக்குழு கூறியிருந்தது.இந்தப் படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஆஸ்கருக்கான போட்டியில் தேர்வாகியுள்ளது. இந்தப் பிரிவில் ’டியூன்: பார்ட் 3’, தி ஒடிஸி, ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, புராஜெக்ட் ஹெயில் மேரி, டிஸ்கோலசர் டே, மோனா ஆகிய படங்களும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. லண்டனை மையமாகக் கொண்டு செயல்படும் டிஎனிஜி விஷுவல் ஸ்டூடியோ இதுவரை இன்செப்ஷன் (2011), இன்டர்ஸ்டெல்லார் (2015), எக்ஸ் மெக்கினா (2016), பிளேட் ரன்னர் 2049 (2018), ஃபர்ஸ்ட் மேன் (2019), டெனெட் (2021), டியூன் (2022) மற்றும் டியூன்: பார்ட் டூ (2025) என 8 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. ராமாயணா படத்தினை உருவாக்கிய ஸ்டூடியோவும் இந்தமுறை தி ஒடிஸி, மோனா, சூப்பர்கேர்ள், ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2023ல் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் இதேபிரிவில் பங்கேற்று இறுதிவரை சென்று ஆஸ்கர் வெல்ல தவறியது. ராமாயணா அந்தக் குறையைத் தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்கர் விருது போட்டிக்கான வாக்களிக்க டிச.7 முதல் டிச.11 வரை நேரம் ஒதுக்கப்படும். டிச.15ஆம் தேதி இந்தத் தேர்வுகள் குறித்து அறிவிக்கப்படும். ஜன.21ல் இறுதி பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தமுறை 99ஆவது ஆஸ்கர் விருதுகள் மார்ச் 14ஆம் தேதி டால்பி தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இதனை நேரலையாக ஏபிசி வெளியிடுகிறது. Witness the world of Ramayana come alive in cinemas. Book your tickets now!Ramayana, now playing in cinemas worldwide, across all premium formats. pic.twitter.com/pGpvu7VHO1— The World Of Ramayana (@WorldOfRamayana) November 24, 2026தமிழுக்கும் பாரதியாருக்கும் கிடைத்த வெற்றி..! கிராமி விருதுக்குத் தேர்வான பாடகர்கள் நெகிழ்ச்சி! 'Ramayana' among top 20 contenders for Oscars visual effects award