திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுமாறு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி தனக்கு அறிவுறுத்தியதாக, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 25) இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் அவரது உறவினரான அபிஷேக் பானர்ஜி ஆகியோர் தனியார் நிறுவனம் போல நடத்திவருவதாகக் கூறினார். இத்துடன், பிரனாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சந்தித்தபோது, திரிணமூல் கட்சியிலேயே இருந்தால், மமதாவிடம் ஒரு பணியாளராகவே வேலை செய்ய வேண்டுமென அவர் எச்சரித்ததாக, சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.இதுபற்றி, அவர் கூறுகையில், “நீங்கள் ஒரு பணியாளராகவே இருக்க விரும்பினால், அவரோடு (மமதா) இருங்கள். உங்களின் சொந்த வலிமையில் முன்னேற விரும்பினால், பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுங்கள் என பிரனாப் முகர்ஜி கூறினார். ஒரு பணியாளராகவே இருக்க நான் விரும்பவில்லை. அதனால், அந்தக் கட்சியிலிருந்து நான் வெளியேறினேன்” எனக் கூறியுள்ளார்.முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்ட சுவேந்து அதிகாரி முன்னாள் முதல்வர் மமதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். பின்னர், 2020 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி 2026 தேர்தலின் மூலம் மேற்கு வங்கத்தின் முதல்வராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.வாக்குத் திருட்டு!! காங்கிரஸ் கட்சி நாளை நாடு தழுவிய போராட்டம்!WB CM Suvendu Adhikari has stated that the late former President Pranab Mukherjee had advised him to leave the Trinamool Congress and work alongside PM Modi.