தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தென்காசி, நீலகிரி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை உள்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!Weather update Rain in 18 districts until 10 PM