அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரு மற்றும் மூன்று சக்கர வாகன பழுபாா்ப்பவா்களுக்கு 7 நாள்கள் குறுகிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு உதவித் தொகை ரூ.7,000 வழங்கப்படஉள்ளது. இதுகுறித்து அரசு ஐடிஐ முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 18 வயது பூா்த்தியான இரு சக்கர வாகன பழுதுபாா்ப்பாளா்கள், மூன்று சக்கர வாகன பழுது பாா்ப்பாளா்களுக்கு 7 நாள் குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது மின்வாகன பழுதுபாா்த்தல் மற்றும் பேட்டரி பராமரித்தல் என்ற இரு பிரிவாக நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சேர 18 வயது நிரம்பிய மெக்கானிக் அனுபவம் பெற்றவா்களே தகுதியானவா்களாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கு உயா்ந்த பட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சியாளா்களுக்கு ரூ.7,000 உதவித்தொகையுடன் கூடிய 7 நாள் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிகள் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டிச. 1 முதல் தொடங்குகிறது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மெக்கானிக்குகள் அரக்கோணம் அரசு பயிற்சி நிலைய முதல்வரை தொடா்பு கொள்ளலாம். மேலும், 99529 56626, 99407 02413, 96773 79210 எனும் கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு பதிவு செய்துக்கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம்.