தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்! எச்டிஎஃப்சி இயக்குநர் வாழ்த்து!!

Wait 5 sec.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு எச்டிஎஃப்சி மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனுப் பாக்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழான 'தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்து எச்டிஎஃப்சி மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனுப் பாக்சி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், 'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) இதழைத் தொடங்கியுள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு (The New Indian Express Group) மனமார்ந்த வாழ்த்துகள். நம்பகமான மற்றும் வலுவான நிதிசார் ஊடகங்கள் இத்துறையின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை; அவை ஆழமான பார்வைகளை வழங்குவதோடு, ஆக்கப்பூர்வமான உரையாடல்களை ஊக்குவித்து, நிதிச் சூழலமைப்பை வடிவமைக்கும் மாற்றங்கள் குறித்த புரிதலை ஆழப்படுத்துகின்றன. வரும் காலங்களில் இந்தப் பயணம் வெற்றியடைய ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியிருக்கிறார்.தொடர்ந்து தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு, மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, எஸ்பிஐ தலைவர், தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிறுவனத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர. The Financial Standard! Congratulations from an HDFC Director!!