தேநீர் தயாரிக்கும்போது செய்யும் முக்கிய தவறு!

Wait 5 sec.

காலையில் எழுந்ததும் சூடான ஒரு கோப்பை தேநீருக்கு ஈடுஇணை எதுவும் இல்லை என்று நினைப்பவர்களா நீங்கள்? அப்படியென்றால் சரியான தேநீர் போடுவது எப்படி என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.தேநீர் தூளில் தனின் என்ற ஒரு துவர்ப்புச் சுவை கலந்திருக்கும். தேநீர் போடும்போது, அதிக நேரம் கொதிக்கவைத்துவிட்டால், இந்த துவர்ப்புச் சுவை அதிகமாக கசப்பு வந்துவிடும்.சரி, கசப்பு சுவைதானே வந்தால் வந்துவிட்டுப் போகட்டும் என்றால் அப்படியில்லை. இந்த கசப்பான தேநீரைக் குடிப்பதால், உணவில் இருக்கும் இரும்புச் சத்துகளை உடல் ஏற்பதை நிறுத்தக்கூடுமாம்.அதிக தேநீர் தூள் போட்டு அல்லது நன்றாக தேநீர் தூளைக் கொதிக்க வைத்து டீ போடுவது சரியே கிடையாதாம். ஏனென்றால், தேநீரின் ஒரு சிறந்த சுவை மற்றும் அதன் குணத்தை இழந்து, வெறும் அசிடிடி ஏற்படுத்தும் கலவையைத்தான் தேநீர் என்று குடிக்கிறோம் என்கிறார்கள் உணவுத் துறை நிபுணர்கள்.இவ்வாறு அதிகம் கொதிக்கவைத்த தேநீரைக் குடிப்பதால், அன்றைய நாள் முழுவதும் எவ்வளவு அதிகமான இரும்புச் சத்து நிறைந்த உணவை நாம் உட்கொண்டாலும், நமது உடலானது, இரும்புச் சத்தை கிரகித்துக் கொள்ளாதாம். இதனால் தான் பலருக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம்.எனவே, இனி கவனமாக செயல்பட வேண்டும். தேநீர் நல்லது. அதைச் சரியாக தயாரித்துக் குடித்தால். A major mistake made when preparing tea!