நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜை சேர்க்காதது கடினமான முடிவு என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் சேர்க்கப்படாததை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.இந்த நிலையில், நெருங்கிய நண்பரை பிளேயிங் லெவனில் சேர்க்காதது ஒருபோதும் எளிதான விஷயம் கிடையாது எனவும், சிராஜை பிளேயிங் லெவனில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு எனவும் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: முகமது சிராஜ் மிகவும் சிறந்த வீரர் மற்றும் பந்துவீச்சாளர். அவர் இந்திய அணிக்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால், இவையனைத்துக்கும் முன்பாக அவர் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் இருவரும் இந்திய அணிக்காக ஒன்றாக அறிமுகமானோம். இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பிருந்தே சிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அதனால், அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காதது உண்மையில் எனக்கு மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஆனால், சில நேரங்களில் ஃபார்மில் இருக்கும் பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் இடம்பெறச் செய்ய வேண்டியிருக்கும்.முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முகமது சிராஜிடம் பேசினேன். முதல் போட்டியில் அவர் இடம்பெறப் போவதில்லை என்பதைக் கூறினேன். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாததற்கான காரணத்தைப் புரிந்துகொண்டார். அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை எடுப்பதற்கான காரணத்தையும் அவர் புரிந்துகொண்டார். ஒவ்வொரு வீரரின் கிரிக்கெட் பயணத்திலும் இதுபோன்ற சூழல் வரும் என நினைக்கிறேன். இந்த சூழலை சிராஜ் புரிந்துகொண்டார் எனவும் நினைக்கிறேன் என்றார்.கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் இருவரும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.Indian team captain Shubman Gill has stated that the decision to exclude Mohammed Siraj from the playing eleven for the first Test match against New Zealand was a difficult one.ஒரு பந்துகூட வீசாமல் பாகிஸ்தானை சாம்பியன் என அறிவிப்பதா? இந்திய அணியின் கேப்டன் கேள்வி!