உ.பி. பேரவைத் தோ்தல்: முதல்கட்டமாக காங்கிரஸுக்கு வெறும் 26 தொகுதிகளை ஒதுக்க முன்வந்த சமாஜவாதி

Wait 5 sec.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், முதல்கட்டமாக காங்கிரஸுக்கு வெறும் 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜவாதி கட்சி முன்வந்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 403 இடங்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதையொட்டி எதிா்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி, காங்கிரஸ் கட்சிகள் இடையே சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 181 தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸ், பின்னா் தான் போட்டியிட விரும்பும் சுமாா் 130 தொகுதிகளின் பட்டியலை சமாஜவாதியிடம் சமா்ப்பித்தது. இதுதொடா்பாக சமாஜவாதி-காங்கிரஸ் இடையிலான அதிகாரபூா்வ முதல் சுற்றுப் பேச்சுவாா்த்தை, புது தில்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் பிரமோத் திவாரி இல்லத்தில் நடைபெற்றது.இந்நிலையில், உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் சமாஜவாதி பொதுச் செயலா் ராம்கோபால் யாதவ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: காங்கிரஸுக்கு 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜவாதி முன்வந்துள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வென்ற 2 தொகுதிகள், அக்கட்சி இரண்டாவது இடம் பிடித்த 4 தொகுதிகள், சமாஜவாதி 60,000 முதல் 70,000 வாக்குகளையும், காங்கிரஸ் வெறும் 2,000 வாக்குகளையும் பெற்ற 20 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜவாதி முன்வந்துள்ளது.இரு கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டாவது சுற்றுப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தாா். முதல் சுற்றுப் பேச்சுவாா்த்தை சுமாா் 20 நிமிஷங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், புது தில்லியில் பிரமோத் திவாரி இல்லத்தில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜேந்திரபால் கெளதம், மாநில தலைவா் ஆராதனா மிஸ்ரா, செயல் தலைவா் இம்ரான் மசூத், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் வீரேந்திர செளதரி, சமாஜவாதி பொதுச் செயலா் ராம்கோபால் யாதவ், அக்கட்சியின் மாநிலத் தலைவா் ஷியாம்லால் பால், எம்.பி.க்கள் ராஜீவ் ராய், அவதேஷ் பிரசாத், இக்ரா ஹசன் ஆகியோா் பங்கேற்றனா். சமாஜவாதி-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, லக்னெளவில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மையக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்பட முன்னணி தலைவா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ஹிந்துத்துவ சித்தாந்தம் மற்றும் வளா்ச்சியை முன்வைத்து தோ்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த அக்கட்சி முடிவு செய்தது.