தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்!

Wait 5 sec.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் அணி ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவை நவ. 30 ஆம் தேதியும், மாநிலங்களவை டிச. 2 ஆம் தேதியும் சிறப்பு அமர்வாகக் கூடுகின்றன. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் அணி ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினர் ஜிதேந்திர அவ்ஹாத் இன்று (நவ. 27) தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் கூறியதாவது:“சரத் பவார் எனக்கு ஒரு கடவுள் போன்றவர். எனவே, அவர் எடுக்கும் எந்த முடிவும் எனக்கு ஏற்புடையதுதான். அவர் சொல்லும் வார்த்தைபடியே நான் செயல்படுவேன். தொகுதி மறுவரை என்பது ஒரு அரசியலமைப்பு சார்ந்த நடைமுறை என்றும், அது நடத்தப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் (சரத் பவார்) கூறியுள்ளார். அதற்கு ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை முழுமையாக ஆய்வு செய்வார்கள். எங்களின் செயல் தலைவர் சுப்ரியா சுலே எடுக்கும் முடிவின்படியே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்.இந்த மசோதாவை சரத் பவார் ஆதரிக்கிறார்; புதிய தொகுதி வரையறைகளின்படி செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் அணியின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.இத்துடன், சுப்ரியா சுலே உள்பட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 மக்களவை உறுப்பினர்களும், இந்த மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர் என சரத் பவார் தன்னிடம் தெரிவித்ததாக, ஜிதேந்திர அவ்ஹாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.மே. வங்க எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி நியமனம் ரத்து! உயர் நீதிமன்றம் அதிரடி!Sharad Pawar faction of the Nationalist Congress Party (NCP) has decided to support the delimitation bill.