இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கேரின்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அண்மையில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டைச் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி இந்த சாதனையைப் படைத்தார்.இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி மிகவும் திறமை வாய்ந்த வீரர் எனவும், அவர் மீது மிகவும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும் எனவும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கேரின்ஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் திறமையான வீரர் என நினைக்கிறேன். 200 ரன்களில் 28 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதனை அவரால் ஒவ்வொரு முறையும் செய்ய முடியாது. அவரால் இத்தனை சிக்ஸர்களை மறுபடியும் ஒருபோதும் விளாச முடியாமல் போகலாம். ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும்போதும் அவர் மீது மிகவும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்திய ரசிகர்கள் எப்போதும் அவரிடமிருந்து அதிரடியான ஆட்டத்தை எதிர்பார்ப்பார்கள். அது எல்லா முறையும் நடக்கப் போவதில்லை.அதனால், வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. அனைவரும் அவர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள். ஆனால், அவர்களது எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு முறையும் பூர்த்தி செய்வது மிகவும் கடினம். அவர் ஒவ்வொரு முறையும் அதிரடியாக விளையாட வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனால், அவருக்கு அதிகப்படியான அழுத்தம் இருக்கப் போகிறது. அதனை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பது சுவாரசியமாக இருக்கப் போகிறது என்றார்.ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. அதில், வைபவ் சூர்யவன்ஷி மட்டுமே 204 ரன்களை எடுத்தார்.அந்தப் போட்டியில் இந்திய அணி வெறும் 14.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.Former New Zealand player Chris Cairns has stated that the cricketing journey of young Indian player Vaibhav Suryavanshi is going to be very challenging.மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!