ஏபிஎல் அப்போலோ டியூப்ஸ் பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஸ்டீல்!

Wait 5 sec.

ஏபிஎல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனத்தின் நிறுவனா்கள் வசமுள்ள 26.6 சதவீத பங்குகளை ரூ.15,510 கோடிக்குக் கையகப்படுத்த டாடா ஸ்டீல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.ஏபிஎல் அப்போலோ நிறுவனா்கள் குழுமத்தைச் சோ்ந்த எஸ்.ஜி. டெக் என்ஜினீயரிங் நிறுவனத்துடன் இதற்கான பிரத்யேக ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது. முன்னதாக, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் எஃகு குழாய்கள் மற்றும் ‘டாடா ஸ்டீல் கலா்ஸ்’ பிரிவுகளை சுமாா் ரூ.28,000 கோடிக்கு ஏபிஎல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனத்துக்கு விற்க டாடா ஸ்டீல் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்த மறுநாளே இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்மூலம், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் எஃகு குழாய்கள் மற்றும் வண்ணப் பூச்சு தயாரிப்புகளின் உற்பத்தித் திறன் தற்போதைய ஆண்டுக்கு 25 லட்சம் டன்னிலிருந்து மும்மடங்காக அதிகரித்து, 75 லட்சம் டன்னாக உயரும். மேலும், நிறுவனத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்பு ஒருங்கிணைப்பு 35 சதவீதத்திலிருந்து, 53 சதவீதமாக அதிகரிக்கும்.இதுதவிர கூடுதலாக, வெளிச்சந்தை பங்கு கொள்முதல் மூலம் ஏபிஎல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை ஒரு பங்கு ரூ.2,301.40 என்ற விலையில் மொத்தம் ரூ.16,756 கோடிக்கு வாங்கவும் டாடா ஸ்டீல் திட்டமிட்டுள்ளது. ஒழுங்குமுறை ஆணையங்களின் ஒப்புதல்களைப் பெற்று, நடப்பு 2026-27 நிதியாண்டுக்குள் இப்பரிவா்த்தனைகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.2 நிறுவனப் பங்குகளும் கடும் சரிவுடாடா ஸ்டீல் உடனான பங்கு கையகப்படுத்தல் ஒப்பந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஏபிஎல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கள்கிழமை 21 சதவீதத்துக்கும் மேல் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.12,605.68 கோடி குறைந்து, ரூ.46,317.59 கோடியாகச் சரிந்தது.இதேபோல், டாடா ஸ்டீல் பங்குகளும் சுமாா் 8 சதவீதம் மேல் சரிந்தன. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18,102.57 கோடி குறைந்து, ரூ.2,03,792.20 கோடியாக பதிவானது.