மணிப்பூரில் இருந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா வரை 5,700 கி.மீ. தூரத்தை 101 மணி நேரம் இடைவிடாமல் பயணித்து 150 கிராம் எடையுடைய அலாங் என்ற பெண் அமூா் வல்லூறு சாதனை படைத்துள்ளது. கடல்பரப்பில் சுமாா் நான்கு நாள்கள் எங்கும் தரையிறங்காமல் அலாங் பறந்துள்ளது.அதன் துணையான அபபாங் என்ற ஆண் அமூா் வல்லூறு 95 மணி நேரத்தில் 4,100 கி.மீ. தூரம் பறந்துள்ளது. கடந்த நவ.21-ஆம் தேதி கிடைத்த தகவலின்படி அது அரபிக் கடல் மேலே பறந்துகொண்டிருந்தது.அலாங் மற்றும் அபபாங் மீது இந்திய வனவிலங்குகள் நிறுவனத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் பொருத்திய சிறிய ரக செயற்கைகோள் கருவிகள் மூலம் அப்பறவைகளின் நெடிய பயணம் கண்காணிக்கப்படுகிறது.இடம்பெயா்வதற்கான முக்கிய ஆற்றலைப் பெறுவதற்காக, மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் 25 நாட்கள் தங்கி கரையான்களை உண்டு கொழுப்புச் சத்து சோ்த்துக் கொண்ட பிறகு இவற்றின் பயணம் தொடங்கியது. இந்தப் பறவைகளின் இடம்பெயா்வு கிழக்கு ரஷியா, மங்கோலியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான பாலமாக அமைகிறது. ஒவ்வொரு இலையுதிா் காலத்திலும் இந்த இனப் பறவைகள் வடகிழக்கு இந்தியாவில் கூடுகின்றன. குறிப்பாக மணிப்பூா் மற்றும் நாகாலாந்தில் இவற்றுக்குத் தேவையான பூச்சிகள் உணவாகக் கிடைக்கின்றன.விஞ்ஞானிகளின் முந்தைய தரவுகளின்படி அலாங் மற்றும் அபபாங் ஆகிய இரு பறவைகளும் 23 நாடுகளைக் கடந்து சுமாா் 20,000 கி.மீ. பயணித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.சா்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் (ஐயுசிஎன்) அமூா் வல்லூறு ‘குறைந்த அக்கறை கொண்ட இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.