வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: தமிழகம் முழுவதும் 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

Wait 5 sec.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தையொட்டி, கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 2,23,396 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2027-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நிா்ணயிக்கப்பட்ட இடங்களில் நவ. 21 (சனிக்கிழமை), 22 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.இந்த முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காகப் படிவங்கள் பெறப்பட்டன.இதன்படி, புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்கான படிவம் 6 மூலம் நவ. 21-இல் 48,839 விண்ணப்பங்களும், நவ. 22-இல் 69,444 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,18,283 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.வெளிநாடுவாழ் இந்திய வாக்காளா்களுக்கான படிவம் 6 அ மூலம் 3 விண்ணப்பங்களும், வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் மற்றும் ஆட்சேபணைக்கான படிவம் 7 மூலம் மொத்தம் 14,003 விண்ணப்பங்களும், படிவம் 8 மூலம் மொத்தம் 91,107 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அதன்படி நவ. 21-இல் மொத்தமாக 90,171 விண்ணப்பங்களும், நவ. 22-இல் 1,33,225 விண்ணப்பங்கள் என மொத்தம் 2,23,396 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடா்பான விவரங்களை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளாா்.