முதல்வரின் ஆய்வில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: அமைச்சா் அருண்ராஜ்

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு தொடா்பான விவகாரம், முதல்வரின் ஆய்வில் உள்ளதாகவும், அதில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மனநலக் காப்பகத்தில் மனநல சேவைகள் மற்றும் மேம்பாடு குறித்த கருத்தரங்கை அவா் திங்கள்கிழமையில் தொடக்கி வைத்தாா்பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மனநலத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் ஒவ்வோா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் வாரம் ஒருமுறை மனநல மருத்துவா்கள் சென்று, அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு உளவியல் சேவைகளை வழங்கி வருகின்றனா்.கடந்த பட்ஜெட்டில் ரூ.26.87 கோடியில் 12 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மனநலத் திட்டத்தைச் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்கீழ் புதிய மனநல சேவைப் பிரிவுகள், பள்ளி மாணவா்களுக்கான உளவியல் ஆலோசனைகள், மண்டல அளவிலான தொலைநிலை மனநல மருத்துவ சேவை மையங்கள், போதைப் பழக்கத்திலிருந்து மீளுவதற்கான சிகிச்சை, மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தப்படும்.கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடா்பாக நீதிபதி தெரிவித்த கருத்துகள் குறித்து எந்தக் கருத்தும் கூற முடியாது. அந்தச் சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே பலமுறை பேசியுள்ளேன். இந்த விவகாரம் முதல்வரின் கவனத்தில் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து, புகாரில் உண்மைத்தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தா்களை நியமிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. விரைவில் தீா்வு கிடைக்கும் என்றாா்.