கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் நீதிபதியிடம் நேரடியாக மாவட்ட பெண் ஆட்சியர் வாக்குமூலம் அளித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்ததாக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, தமிழ்நாடு அரசு 4 போ் கொண்ட ‘உள் விசாரணைக் குழு’ அமைத்துள்ளது.இந்த நிலையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கைகோரி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முன்னாள் எம்.பி. கனிமொழி சோமுவும் மனு தாக்கல் செய்துள்ளார்.இதனிடையே, விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதியிடம் மாவட்ட ஆட்சியர் நேரில் வாக்குமூலம் அளித்துள்ளார். சுமார் 2.15 மணிநேரமாக ஆட்சியரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.164 பிரிவின்படி, நீதிபதி முன்பாக பாதிக்கப்பட்டவர் நேரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது வழக்கின் உறுதித்தன்மை மேலும் அதிகரிக்கிறது. இதன் மூலம் நீதிபதியும் ஒரு சாட்சியாக மாறுகிறார். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் வாக்குமூலத்தை மாற்றவோ திருத்தவோ முடியாது.ஆட்சியரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக நீதிமன்றத்தில் போலீசார் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் மும்முரம் காட்டும் திமுக!Statement recorded from the District Collector (a woman) regarding a complaint that the TVK MLA from Kallakurichi sent an obscene text message