ரூ.5-க்கு சாப்பாடு, ரூ.40 ஆயிரம் உதவித்தொகை, அக்னிவீரர்களுக்கு பணி: சமாஜ்வாதி தேர்தல் வாக்குறுதி

Wait 5 sec.

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியிருக்கிறது.2027ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல் தேர்தல் அறிக்கையை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியலமைப்புச் சட்ட நாளை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சி சார்பில் இன்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகியுள்ளன.இன்று வெளியான தேர்தல் அறிக்கையில்,தமிழ்நாட்டில் செயல்படும் அம்மா உணவகம் போல சமாஜ்வலாதி உணவகங்களில் ரூ.5க்கு உணவு வழங்கும் திட்டம்பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள்வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்கள், முதியவர்களுக் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் உதவித்தொகைவேலையில்லா பட்டதாரி மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவித் தொகைஉடனடியாக வேளாண் கடன் தள்ளுபடிவிவசாயத்துக்கு இலவச மின்சாரம்வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்12ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.நவ. 26ஆம் தேதி, சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கடந்த மாதமே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் இன்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகியிருக்கின்றன.உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல் கட்சி சமாஜ்வாதி.The Samajwadi Party has made several election promises, including 'Amma' canteens, a monthly allowance, and the provision of police jobs for 'Agniveers'.