வங்கதேசத்துக்கு எதிரான தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் விலகல்!

Wait 5 sec.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.வங்கதேச அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் ஜெரால்டு கோட்ஸீ மற்றும் குவெனா மாபாகா விலகியுள்ளனர்.Squad Update: Bangladesh White Ball Tour Seam bowlers Gerald Coetzee and Kwena Maphaka have been ruled out of the upcoming white-ball tour against Bangladesh due to injury.Coetzee, who was named in both the One-Day International (ODI) and T20 International (T20I) squads,… pic.twitter.com/f3X8bpJiiw— Proteas Men (@ProteasMenCSA) November 26, 2026காயம் காரணமாக விலகியுள்ள ஜெரால்டு கோட்ஸீ மற்றும் குவெனா மாபாகாவுக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் டியான் வான் ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் ஈதன் பாஷ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜேஜே பாஸன் டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஒருநாள் தொடர் வருகிற டிசம்பர் 10 தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.South African fast bowlers have withdrawn from the ODI and T20 series against Bangladesh due to injuries.கடைசி டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா?