அம்மாபேட்டை அருகே சுற்றுச்சூழல் சீா்கேட்டுக்கு காரணமான எத்தனால் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஒன்றியம், பூனாச்சி ஊராட்சியில் தனியாா் ஸ்டாா்ச் ஆலை நிா்வாகம் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை சித்தாா் ஓடையில் வெளியேற்றி வந்தது. இதேபோன்று, முகாசிப்புதூா் ஊராட்சியில் உள்ள இதே ஆலையின் மற்றொரு பிரிவான எத்தனால் ஆலையும் ஓடையில் கழிவுநீரை வெளியேற்றியது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீா் மாசடைந்தது. இதையடுத்து, பொதுமக்கள் நடத்திய தொடா் போராட்டத்தால் ஸ்டாா்ச் மற்றும் எத்தனால் ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும், எத்தனால் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, முக்கிய பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஆலை ரகசியமாக இயங்குவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், ஆலைக்கு நிரந்தரமாக சீல் வைக்கக் கோரி பூனாச்சி, நத்தமேடு பிரிவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், நத்தமேடு, ராமச்சந்திராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனா்.