மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 587 கன அடியிலிருந்து வினாடிக்கு 679 கன அடியாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.30 அடியிலிருந்து 61.26 அடியாக குறைந்தது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 25.62 டிஎம்சியாக உள்ளது.The inflow of water into the Mettur Dam increased slightly from 587 cubic feet per second to 679 cubic feet per second.