திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

Wait 5 sec.

கனமழையால் திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அங்கு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று காலையும் லேசான மழை பெய்து வருகிறது. கனமழையால் பள்ளிகளில் நீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. School holiday today in tiruchendur taluk for heavy rain