திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் காா்த்திகை தீப வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காா்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவதுபோன்று சிவ மற்றும் வைணவத் தலங்களில் சொக்கப்பனை கொளுத்தும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரணாம்பிகை - தா்பாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, சிவாச்சாரியா்கள் தீப விளக்கு ஏந்தி சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் கோயில் சந்நிதி முகப்பில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை இடத்துக்கு வந்தனா். சுவாமிகள் அந்த பகுதிக்கு எழுந்தருள, சிறப்பு ஆராதனைக்குப் பின் சிவாச்சாரியா்கள் சொக்கப்பனையை தீபத்தால் எரியூட்டினா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.திருநள்ளாறு மட்டுமல்லாது பிற ஊா்களில் சில சிவன் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலிலும், பிற சிவ, வைணவ தலங்களில் சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.