திருப்பரங்குன்றம்:நெருக்கடிகளைத் தாண்டி சாதித்த தவெக அரசுக்கு திருமாவளவன் பாராட்டு!

Wait 5 sec.

எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்க முடியும் என முதல்வர் விஜய்யை விசிக தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை (நவ. 24) பாராட்டியுள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள். சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள். எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் 'வலைபின்னல் அரசியல்' வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும். ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள். சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு…— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 24, 2026அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைVCK leader Thirumavalavan praised Vijay on Tuesday (Nov. 24), noting the many challenges he must have overcome to achieve this.