தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்திற்கான தனது டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். தேசிய விருது வென்ற தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் குமார், திலீப் சுப்பராயன் நடித்துள்ளார்கள். டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படம் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தனது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளதாகப் படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது. முன்னதாக நாயகன் விஜய் சேதுபதியின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான பத்தா படமும் வெற்றியடைந்தது.மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.தமிழுக்கும் பாரதியாருக்கும் கிடைத்த வெற்றி..! கிராமி விருதுக்குத் தேர்வான பாடகர்கள் நெகிழ்ச்சி! Thiagarajan Kumararaja’s Pocket Novel film Dubbing begins for Malavika Mohanan