தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)

Wait 5 sec.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ஒரு பவுன் ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.தங்கம் பவுனுக்கு ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில், கடந்த வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. இந்த வாரத்தில் திங்கள்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,080, செவ்வாய்க்கிழமை ரூ.920 உயா்ந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு அதிரடியாக ரூ.2,360 குறைந்தது. தொடா்ந்து, வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.11,540 -க்கும் பவுனுக்கு ரூ.960 உயா்ந்து, ரூ.92,320-க்கு விற்பனையானது.தொடர்ந்து உயரும் தங்கம் விலைஇந்த நிலையில், வெள்ளிக்கிழமை(நவ.27) கிராமுக்கு ரூ.60 உயா்ந்து, ரூ.11,600 -க்கும் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து, ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.18 காரட் தங்கம் விலைஅதுபோன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ரூ.9,495-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.75,960-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.170-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.Gold price continues to rise! Today’s status (Nov. 27)டெபிட் காா்டுகளைவிட கிரெடிட் காா்டு செலவினம் 6 மடங்கு அதிகரிப்பு