சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Wait 5 sec.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை காற்றுடன் மழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 19 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, அடுத்த தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாளைக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தலைநகர் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துட் கருமேகங்கள் சூழ்ந்தும் காணப்பட்டன.இந்த நிலையில், சென்னையில் அம்பத்தூர், எழும்பூர், மெரினா, புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், கிண்டி மற்றும் வில்லிவாக்கம், ஆழ்வார்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 15 நிமிடங்கள் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் காலையில் பணிக்குச் செல்வோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.கடலோர மாவட்டங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நவ. 29 ஆம் தேதி மேல் வளிமண்டல சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நவ. 30 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய அந்தமான் - நிக்கோபார் தீவுகள் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.அந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Rain accompanied by wind is occurring in Chennai and its suburban areas on Friday morning.